10 ஜூன், 2015

மகிழ்வுடன் இலைக் கஞ்சி அருந்தும் மாணவர்கள்

ஆரோக்கியமான உணவை அறிமுகப்படுத்தும் வகையில் தரம் 2 மாணவர்களுக்கு இலைக்கஞ்சி தயாரிக்கும் செய்முறை பயிற்சி வழங்கப்பட்டது. ஆசிரியர்களுடன் பெற்றோர்களும் இதில் கலந்து கொண்டனர். மகிழ்வுடன் இலைக் கஞ்சி அருந்தும் மாணவர்களை
படங்களில் காணலாம் .


09 ஜூன், 2015

மாகணமட்ட தமிழ் மொழித்தின போட்டி

மாகணமட்ட தமிழ் மொழித்தின போட்டியில் எமது பாடசாலையைச்  சேர்ந்த  மாணவி அ.நர்த்தகி  பிரிவு 1 ஆக்கம் எழுத்துப்போட்டியில்  முதலாம் இடத்தையும் ,செல்வி .சி .மோகனவாணி பிரிவு 1 வாசிப்புப் போட்டியில் முன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர் . இவர்களுக்கு எமது பாராட்டுக்கள் .

08 ஜூன், 2015

தரம் 1,2 மாணவர்களுக்கான பல்மட்டக் கற்றல் கற்பித்தற் செய்முறை விளக்கக் கண்காட்சி.

தென்மராட்சி வலய ஆரம்பக்கல்விப்  பிரிவினரின்   தரம் 1,2 மாணவர்களுக்கான பல்மட்டக் கற்றல் கற்பித்தற் செய்முறை விளக்கக் கண்காட்சி  இன்று எமது பாடசாலையில் இடம் பெற்றது. இக் கண்காட்சி  ஆரம்ப நிகழ்வின் சில காட்சிகள்.


05 ஜூன், 2015

சுற்றாடல் தின பரிசளிப்பு , பல்லூடக ஏறியி கையளித்தல் மற்றும் மூலிகைக்கண்காட்சி நிகழ்வுகளில் சிலபதிவுகள்.

இன்று வடமாகாணசபை  உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான  கௌரவ.தருமலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் எமது பாடசாலைக்கு  பல்லூடக ஏறியி ஒன்றினை வழங்கியதுடன் சுற்றாடல் தின பரிசளிப்பு , மற்றும் மூலிகைக்கண்காட்சி நிகழ்வுகளில்  பிரதம விருந்தினராகவும்  கலந்தது சிறப்பித்தார்.