31 ஜூலை, 2015

போதைவஸ்து தடுப்பு சமூக விழிப்புணர்வு

எமது பாடசாலையில் போதைவஸ்து  தடுப்பு  சமூக விழிப்புணர்வு செயலமர்வு  30.07.2015 அன்று யாழ் போதனா வைத்திய சாலை வைத்தியர் சி.சிவரூபன் அவர்கள் வளவாளராக கலந்து சிறப்பித்தார் நிகழ்வின் சில காட்சிகள்.


28 ஜூலை, 2015

கற்றல் வளநிலையம் நடாத்தும் ஆக்கத்திறன் கண்காட்சி - 2015

                                                     எமது பாடசாலையின் கற்றல் வளநிலையம் நடாத்தும் ஆக்கத்திறன் கண்காட்சி இன்று காலை 9.30 மணிக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.சு .கிருஸ்ணகுமார் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  நிகழ்வின் சில பதிவுகள்








17 ஜூலை, 2015

ஆடிப்பிறப்பு நிகழ்வு

ஆடிப்பிறப்பு என்பது தமிழ் இந்துக்கள் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு தினமாகும். ஆடிப்பிறப்பு என்றவுடன் ஞாபகத்திற்க்கு வருவது ஆடிக்கூழும், நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் "ஆடிப்பிறப்பிற்க்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே" என்ற பாடலும் தான். எமது பாடசாலையில் ஆடிப்பிறப்பு நிகழ்வு இன்று இடம் பெற்றது. ஆடிக்கூழ்  காய்ச்சும் நிகழ்வில் ஆசிரியர்களும் ,மாணவர்களும் ஈடுபடுவதையும் , மகிழ்வுடன் கூழ் அருந்தும் மாணவர்களையும் இங்கு காணமுடிகின்றது .







14 ஜூலை, 2015

கேகாலை கல்வி வலயத்தினரின் வருகை

நாட்டின் நிரந்தர அபிவிருத்திக்கு அடிப்படையான சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வேலைத் திட்டத்தின்  அடிப்படையில் கேகாலை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் அதிபர்கள் அடங்கிய குழுவினர் எமது பாடசாலைக்கு வருகை தந்தபோது. 


அன்பின் கல்விக் கூடம்

இன நட்புறவான பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தின்  ஒரு அங்கமாக  தென்மராட்சி வலய பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்ட தென்பகுதிக்கான கல்விச் சுற்றுலாவின் போது எமது பாடசாலையுடன்   அன்பின் கல்விக் கூடமாக  கேகாலை நயக்ககந்த பெண்கள் ஆரம்ப பாடசாலை இணைந்து கொண்டது. சுற்றுலாவின் சில காட்சிகள்.