17 நவம்பர், 2016

மாகாணமட்ட விநாடி வினா போட்டியில் இரண்டாமிடம்.

தரம் 5 மாணவர்களுக்கான விநாடிவினாப் போட்டியில் வலயமட்டத்தில் முதலிடம் பெற்ற எமது பாடசாலை அணி மாகணமட்ட போட்டியில் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டது.
முதல் சுற்றில் வவுனியா வடக்கு வலய அணியுடனும் அடுத்த சுற்றில் வடமராட்சி வலய அணியுடனும் போட்டியிட்டு இறுதிச் சுற்றுக்கு தெரிவாகி இறுதிச்சுற்றில் யாழ்வலய (ஜோன்பொஸ்கோ) அணியுடன் போட்டியிட்டு இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டனர். அதிபர், பயிற்சியளித்த ஆசிரியர்களுடன் மாணவர்கள்.

1.பா.வேணுகானன்
2.த.அக்சயன்
3.அ.சயூரி
4. றொ.தீபிகா
5.உ.அர்ச்சித்

 

18 அக்டோபர், 2016

தேசிய ரீதியில் தடம் பதித்த எங்கள் மாணவர்கள்






மூன்று பதங்கங்களைப் பெற்று தேசிய ரீதியில் தடம் பதித்தது சாவகச்சேரி இந்துக் கல்லூரி. கடந்த காலத்தில் பல சவால்களிற்கு முகம் கொடுத்த யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி மனந்தளராது தொழிற்படும் கல்லூரி முதல்வர் திருவாளர் ந.சர்வேஸ்வரன் அவர்களது சிறப்பான நெறிப்படுத்தல் மற்றும்  விளையாட்டுத் துறையின் பொறுப்பாசிரியர் மதனரூபன் அவர்களது வழிப்படுத்தலிலும்  இவ் வெற்றிப்யணம் சாத்தியமானது. 

கோலூன்றிப் பாய்தலில் (17 வயதின் கீழ்)
  1. செல்வன் புவிதரன் 1ம் இடம் (தங்கப்பதக்கம்) ஆண்கள் பிரிவு
  2. செல்வி ச.சங்கவி 2ம் இடம் (வெள்ளிப் பதக்கம்) பெண்கள் பிரிவு

கோலுன்றிப் பாய்தல் (19 வயதின் கீழ் பெண்)
  3. செல்வி கிரிஜா 2ம் இடம் (வெண்கலப் பதக்கம்)

            இவர்களை  கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை 9.00மணியளவில் இடம் பெற்றபோது  யா/சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
   வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் வழிப்படுத்திய அதிபர் , ஆசிரியர்களுக்கும்  எமது பாடசாலை சமூகம் சார்பில் வாழ்த்துக்கள்.
 

04 அக்டோபர், 2016

நூலகத்திற்கு புத்தக அன்பளிப்பு

அமரர் திருமதி. நாகேஸ்வரி  வெற்றிவேலு  (ஓய்வுபெற்ற  ஆசிரியர் ) அவர்களின்  ஞாபகார்த்தமாக எமது பாடசாலை நூலகத்திற்கு 700 புத்தகங்களை அவரது குடும்பத்தினர் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். அவர்களுக்கு எமது பாடசாலை சமூகம் சார்பில் நன்றிகள்.

16 ஜூன், 2016

வலய மட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வினாடிவினா போட்டியில் முதலாம் இடம்.

 வலய மட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வினாடிவினா போட்டியில் எமது பாடசாலை மாணவி செல்வி .அகிலன் சயூரி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்   இவரை எமது பாடசாலை சமூகத்தின் சார்பில் பாராட்டுகின்றோம் .

29 ஏப்ரல், 2016

தமிழ் சிங்கள புத்தாண்டு தினம் - 2016

எமது பாடசாலையில் இடம்பெற்ற தமிழ் சிங்கள புத்தாண்டு தின நிகழ்வுகளில் மாணவர்களும் சில பெற்றோர்களும் ஆசிரியர்களுடன் இணைந்து சம்பிரதாயங்களை பின்பற்றி கலந்து கொண்டனர் . காவடி , கும்மி கோலாட்டம் போன்ற பாரம்பரிய கலை வெளிப்பாடுகளால்  பாடசாலை முன்றலை  மாணவர்கள் கலகலப்பாக்கினர்.


03 மார்ச், 2016

அகில இலங்கை பாடசாலை சதுரங்க சங்கம் நடாத்திய சதுரங்க போட்டியில் 3 மாணவர்கள் எமது பாடசாலையில் இருந்து தேசிய மட்டத்திற்கு தெரிவு.

அகில இலங்கை பாடசாலை சதுரங்க சங்கம் நடாத்திய சதுரங்க போட்டியில் மாவட்ட மட்டத்தில் 3 மாணவர்கள் எமது பாடசாலையில் இருந்து தேசிய மட்டத்திற்கு தெரிவாகினர்.  அதிபர், உப அதிபர் மற்றும் சதுரங்க பயிற்சியாளர் திரு.தி .ராஜசிங்கம் ,கழக பொறுப்பாசிரியர் ஆகியோருடன்  வெற்றி பெற்ற மாணவர்கள்


மாணவர் சந்தை 2016 ( தரம் 2)

சம்பத் வங்கியின்  அனுசரணையுடன்   எமது பாடசாலையில் இன்று  நடைபெற்ற தரம் 2 மாணவர்களுக்கான "மாணவர் சந்தை" நிகழ்வில்   பெற்றோர்களும்  ஆசிரியர்களும் கலந்து கொண்டனர் . வியாபாரிகளின் வேடமிட்டு மாணவர்கள் பல்வேறு பொருட்களையும் விற்பனை செய்ததை காணமுடிந்தது.இந் நிகழ்வின் சில பதிவுகள்.

03 பிப்ரவரி, 2016

இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு - 2016

எமது பாடசாலையின் 2016 ம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 02.02.2016 செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது. பாடசாலை அதிபர் திருமதி.சி.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்மராட்சி கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளார் திருமதி .சிவத்திரை சிவநாதன் அவர்களும் மேலும் பல விருந்தினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

11 ஜனவரி, 2016

04 ஜனவரி, 2016

முதல் நாள்

முதல் நாள், முதலாம் தரத்திற்கு பெற்றோரின் கரம் பற்றி வந்த பிஞ்சுகளின் வண்ணக் கோலம்.