24 டிசம்பர், 2018

எமது பாடசாலை ஆசிரியைக்கு மாகாணநிலை ''குரு பிரதீபா பிரபா"

எமது பாடசாலை ஆசிரியை திருமதி  சி.புஸ்பராசா   அவர்கள் மாகாணநிலை ''குரு பிரதீபா பிரபா" விருதினை பெற்றுக்கொண்டார். இவரை  பாராட்டி வாழ்த்துகின்றோம். 


19 டிசம்பர், 2018

மாகாணமட்ட விருது வழங்கும் நிகழ்வில் எமது பாடசாலை மூன்று விருதுகளை பெற்றுக்கொண்டுள்ளது.

மாகாணமட்ட விருது வழங்கும் நிகழ்வில் தென்மராட்சி வலயத்தில் வகை மூன்று பாடசாலையாகிய எமது பாடசாலை மூன்று விருதுகளை பெற்றுக்கொண்டுள்ளது.
1. 2017 சுகாதார மேம்பாட்டு பாடசாலைக்கான தங்க விருது.

2. 2018 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 85 %
மாணவர்கள்100புள்ளிகளுக்கு மேல் பெற்றமைக்கான விருது.

3. 2018  வகை  மூன்று பாடசாலைகளுக்கான வெளிவாரி மதிப்பீட்டில்   முதன்மை நிலை பெற்றமைக்கான விருது.





இவ்வாறான முதன்மைநிலையை பெறுவதற்கு உழைத்த பாடசாலை சமூகத்தினர் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

30 நவம்பர், 2018

எமது பாடசாலை ஒளிப்படம் தரம் 9 சைவநெறி பாடப்புத்தகத்தில்.


 

எமது இணையப்பக்கத்தில் வெளியான  2015 ஆடிப்பிறப்பு நிகழ்வின் ஒளிப்படம் தரம் 9 சைவநெறி பாடப்புத்தகத்தில் வெளிவந்துள்ளது.  இது எமது இணையப்பக்கத்திற்கு கிடைத்த அங்கீகாரம் என்பதை உணரமுடிகின்றது.

இங்கே சொடுக்கவும் http://chpschool.blogspot.com/2015/07/blog-post_17.html

21 நவம்பர், 2018

கற்றல் வளநிலைய ஆக்கத்திறன் கண்காட்சி - 2018

எமது பாடசாலையின் கற்றல் வளநிலையம் நடாத்தும் ஆக்கத்திறன் கண்காட்சி இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு பாடசாலையில் இடம் பெற்றது. நிகழ்வின் சில பதிவுகள்.

14 நவம்பர், 2018

"அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டு மாடிக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

                                  எமது பாடசாலையில் "அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டு மாடிக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. நிகழ்வில் திரு.த. கிருபாகரன்.  தென்மராட்சி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம் ) அவர்கள் முக்கிய அதிதியாக கலந்துகொண்டார். மற்றும் திரு.சோ .திருக்குமரன் உதவிக் கல்விப் பணிப்பாளர் (ஆரம்பக்கல்வி)  யா /சாவகச்சேரி இந்துக்கல்லூரி அதிபர் திரு.ந.சர்வேஸ்வரன் , ஓய்வுநிலை அதிபர் திருமதி . சியாமளா கந்தசாமி பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர்  கலந்து சிறப்பித்தனர் .

வாசிப்புமாத போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு

எமது பாடசாலையின் கற்றல் வளநிலையத்தினால் நடாத்தப்பட்ட வாசிப்புமாத போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஓய்வுநிலை அதிபர் திரு. கைலைநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சையில் 150 புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து மதிப்பளிக்கப்பட்டது.













13 நவம்பர், 2018

சிறுவர் நாடக போட்டியில் வலயமட்டத்தில் முதலிடம்.

எமது பாடசாலையின் சிறுவர் நாடக அணியினர் வலயமட்டத்தில் இடம்பெற்ற சிறுவர் நாடக போட்டியில் முதலிடம் பெற்றுள்ளனர். இம் மாணவர்களையும் இவர்களை சிறப்பாக பயிற்றுவித்து வழிகாட்டிய ஆசிரியை திருமதி. சி.புஸ்பராசா அவர்களையும் பாடசாலை சமூகம் சார்பில் வாழ்த்துகின்றோம்.





31 அக்டோபர், 2018

பரிசில் நாள் - 2018

எமது பாடசாலையின் பரிசில் நாள் நிகழ்வு 24.10.2018 புதன்கிழமை அன்று நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக வாழ்நாள் பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.  அவரது துணைவியாரும் எமது பாடசாலையின் முன்னைநாள் அதிபருமான திருமதி சியாமளா கந்தசாமி அவர்கள் பரிசில் வழங்குனராக கலந்து சிறப்பித்தார்.


18 அக்டோபர், 2018

தரம் 5 புலமைப்பரிசில் மாணவர் மதிப்பளிப்பு நிகழ்வு - 2018

                                 எமது பாடசாலையின் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர் மதிப்பளிப்பு நிகழ்வு  10.10.2018 புதன்கிழமை  காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தேசிய நிலையில் முதலிடம் பெற்ற (தமிழ் மொழி மூலம்) மாணவி நவாஸ்கன் நதி மற்றும் சித்தி பெற்ற மாணவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். இந் நிகழ்வினை பாடசாலை சமூகத்தினருடன் இணைந்து யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி பிரான்ஸ் பழையமாணவர் ஆசிரியர் சங்கத்தினர்   சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.



11 அக்டோபர், 2018

வடமாகாண செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வில் எமது பாடசாலை அணி முதலிடம்.

இன்று நடைபெற்ற வடமாகாண செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு   நிகழ்வில் எமது பாடசாலையின் தரம் நான்கு ஆண்கள் அணி முதலிடம் பெற்று தேசிய நிலைக்கு தெரிவு செய்யப்பட்டது. தரம் ஐந்து பெண்கள் அணியும் தேசிய நிலைக்கு தெரிவாகியது.  தென்மராட்சி வலயத்தில் முதலிடம்பெற்ற ஒரே ஒரு அணி எமது பாடசாலை தரம் நான்கு மாணவர் அணி என்பது குறிப்பிடத்தக்கதாகும். இம் மாணவர்களை வாழ்த்துவதுடன் இவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிய அதிபர், பிரதி அதிபர் ஆகியோருடன்  செயற்பட்டு மகிழ்வோம் வலய இணைப்பாளர் திருமதி.றா.மயில்வாகனசிங்கம் அவர்களுக்கும்  பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகள்.

.

05 அக்டோபர், 2018

எமதுபாடசாலை மாணவி தேசியநிலையில் முதலிடம்.

       எமது பாடசாலையில் 2018 தரம் 5 புலமைப்பரிசில் பரீடசையில் தோற்றி 28 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். நவாஸ்கன் நதி 198 புள்ளிகளைப் பெற்று மாவட்ட நிலையில்  முதலிடத்தில் உள்ளார்.  தேசிய நிலையில்  தமிழ் மொழி மூலத்தில்  முதல் நிலையில் உள்ளார்.   இவரை பயிற்றுவித்த ஆசிரியர் திரு.க.தவயோகராசா அவர்களையும் பாடசாலை அதிபர் அவர்களையும்  வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் , சித்திப்புள்ளிகளுக்கு மேல்பெற்ற வர்களையும், வாழ்த்துவதுடன்.
தகுதி பெறத் தவறிய மாணவர்களும் இனிவரும் காலங்களில் இதனை அனுபவமாக கொண்டு கல்வியில் மேலும் வெற்றிகள் பெறவேண்டும். என இறைவனை வேண்டுகின்றோம்.