27 ஜூன், 2018

திறன் வகுப்பறையில் ஆர்வத்துடன் மாணவர்கள்.

நவீன கற்றல் சூழலுக்குள் அடியெடுத்து வைக்கும் எமது பாடசாலையில்  இரண்டு திறன் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. திறன் வகுப்பறையில் ஆர்வத்துடன் மாணவர்கள் கற்றலில் ஈடுபடுகின்றனர். ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புக்களும் இடம்பெற்று வருகின்றது. மேலும் சில திறன் வகுப்பறைகளை அமைக்க ஆர்வமுடையோரின் அனுசரணை எதிர்பார்க்கப் படுகின்றது.





26 ஜூன், 2018

செலான் வங்கியின் அனுசரணையுடன் இடம்பெற்ற "மாணவர் சந்தை".

செலான்  வங்கியின் அனுசரணையுடன்   எமது பாடசாலையில் இன்று நடைபெற்ற   "மாணவர் சந்தை" நிகழ்வில்   பெற்றோர்களும்  ஆசிரியர்களும் கலந்து கொண்டனர் . வியாபாரிகளின் வேடமிட்டு மாணவர்கள் பல்வேறு பொருட்களையும் விற்பனை செய்தனர்.



தென்மராட்சிக் கல்வி வலய செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வில் எமது பாடசாலையின் ஐந்து அணிகள் சாதனை.



தென்மராட்சி கல்வி வலய செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வில் எமது பாடசாலையின் ஐந்து அணிகள் சாதனை.

முதலிடம்பெற்று மாகாணப்போட்டிக்கு இரு அணிகள் தெரிவு.
### தரம் 5 பெண்கள் அணி
### தரம் 4 ஆண்கள் அணி

இரண்டாமிடத்தில் இரு அணிகள்.
தரம் 5 ஆண்கள் அணி
தரம் 3 பெண்கள் அணி

தரம் 4 பெண்கள் அணி  மூன்றாமிடம்.

  பங்குபற்றிய மாணவர்களுக்கும் பயிற்றுவித்த பிரதி அதிபர், அணிகளின் பொறுப்பாசிரியர்களுக்கும்  பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகள்.

25 ஜூன், 2018

 எமது பாடசாலையில் 22.06.2018 அன்று இடம் பெற்ற  தரம் 5 மாணவர்களுக்கான சுற்றாடல் பட்டறை நிகழ்வின் பதிவுகள்.



19 ஜூன், 2018

தரம் 3 மாணவர்களுக்கான சுற்றாடல் பாட செயற்பாட்டுப் பட்டறை

இன்று இடம்பெற்ற தரம் 3 மாணவர்களுக்கான சுற்றாடல் பாட செயற்பாட்டுப் பட்டறையின் பதிவுகள்.








18 ஜூன், 2018

உலகளாவிய சிதம்பரா கணிதப்போட்டி 2018 இல்35 பேர் சித்தி.

உலகளாவிய சிதம்பரா கணிதப்போட்டி 2018 (Chithambara Maths Challenge Exam 2018) இல் எமது பாடசாலை மாணவர்கள் 35 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை வாழ்த்துவதுடன். வழிகாட்டிய ஆசிரியர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பில் நன்றிகள். 





11 ஜூன், 2018

பாடசாலையின் புதிய அதிபராக திரு.பொ.நடேசலிங்கம் அவர்கள் 08.06.2018 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதுவரை பாடசாலையின் அதிபராக இருந்த திருமதி . சியாமளா கந்தசாமி அவர்கள் அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றதை தொடர்ந்து நேர்முகப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதிக்கமைய மாகாணக் கல்விப் பணிப்பாளரால் நியமிக்கப்பட்டு எமது பாடசாலையின் புதிய அதிபராக திரு.பொ.நடேசலிங்கம் அவர்கள் 08.06.2018 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

08 ஜூன், 2018

எமது பாடசாலை அதிபர் திருமதி.சியாமளா கந்தசாமி அவர்களின் சேவை நலன் பாராட்டு நிகழ்வு.

                                       41 வருட கல்விப்பணியை நிறைவு செய்து ஓய்வு பெறும் அதிபர் திருமதி. சியாமளா கந்தசாமி அவர்களது சேவைநலன் பாராட்டு நிகழ்வு   07.06.2018 அன்று காலை 10.00 மணியளவில் எமது  பாடசாலையில் பாடசாலை ஆசிரியர் சகோதரத்துவத்தினால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஓய்வுநிலை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு, இவரது பண்புகளை, ஆளுமைத் திறனை வியந்து பாராட்டி கௌரவித்தனர். தொடர்ந்து மதிய விருந்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.