31 அக்டோபர், 2018

பரிசில் நாள் - 2018

எமது பாடசாலையின் பரிசில் நாள் நிகழ்வு 24.10.2018 புதன்கிழமை அன்று நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக வாழ்நாள் பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.  அவரது துணைவியாரும் எமது பாடசாலையின் முன்னைநாள் அதிபருமான திருமதி சியாமளா கந்தசாமி அவர்கள் பரிசில் வழங்குனராக கலந்து சிறப்பித்தார்.


18 அக்டோபர், 2018

தரம் 5 புலமைப்பரிசில் மாணவர் மதிப்பளிப்பு நிகழ்வு - 2018

                                 எமது பாடசாலையின் தரம் 5 புலமைப்பரிசில் மாணவர் மதிப்பளிப்பு நிகழ்வு  10.10.2018 புதன்கிழமை  காலை 7.30 மணியளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தேசிய நிலையில் முதலிடம் பெற்ற (தமிழ் மொழி மூலம்) மாணவி நவாஸ்கன் நதி மற்றும் சித்தி பெற்ற மாணவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். இந் நிகழ்வினை பாடசாலை சமூகத்தினருடன் இணைந்து யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி பிரான்ஸ் பழையமாணவர் ஆசிரியர் சங்கத்தினர்   சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.



11 அக்டோபர், 2018

வடமாகாண செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வில் எமது பாடசாலை அணி முதலிடம்.

இன்று நடைபெற்ற வடமாகாண செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு   நிகழ்வில் எமது பாடசாலையின் தரம் நான்கு ஆண்கள் அணி முதலிடம் பெற்று தேசிய நிலைக்கு தெரிவு செய்யப்பட்டது. தரம் ஐந்து பெண்கள் அணியும் தேசிய நிலைக்கு தெரிவாகியது.  தென்மராட்சி வலயத்தில் முதலிடம்பெற்ற ஒரே ஒரு அணி எமது பாடசாலை தரம் நான்கு மாணவர் அணி என்பது குறிப்பிடத்தக்கதாகும். இம் மாணவர்களை வாழ்த்துவதுடன் இவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிய அதிபர், பிரதி அதிபர் ஆகியோருடன்  செயற்பட்டு மகிழ்வோம் வலய இணைப்பாளர் திருமதி.றா.மயில்வாகனசிங்கம் அவர்களுக்கும்  பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகள்.

.

05 அக்டோபர், 2018

எமதுபாடசாலை மாணவி தேசியநிலையில் முதலிடம்.

       எமது பாடசாலையில் 2018 தரம் 5 புலமைப்பரிசில் பரீடசையில் தோற்றி 28 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். நவாஸ்கன் நதி 198 புள்ளிகளைப் பெற்று மாவட்ட நிலையில்  முதலிடத்தில் உள்ளார்.  தேசிய நிலையில்  தமிழ் மொழி மூலத்தில்  முதல் நிலையில் உள்ளார்.   இவரை பயிற்றுவித்த ஆசிரியர் திரு.க.தவயோகராசா அவர்களையும் பாடசாலை அதிபர் அவர்களையும்  வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் , சித்திப்புள்ளிகளுக்கு மேல்பெற்ற வர்களையும், வாழ்த்துவதுடன்.
தகுதி பெறத் தவறிய மாணவர்களும் இனிவரும் காலங்களில் இதனை அனுபவமாக கொண்டு கல்வியில் மேலும் வெற்றிகள் பெறவேண்டும். என இறைவனை வேண்டுகின்றோம்.





01 அக்டோபர், 2018