30 அக்டோபர், 2019

எமது பாடசாலை ஆசிரியர் திரு.பொன்னையா சிவராசா அவர்களின்சேவை நலன் பாராட்டு நிகழ்வு.

29.10.2019 அன்று இடம் பெற்ற எமது பாடசாலை ஆசிரியர் திரு.பொன்னையா சிவராசா  அவர்களின் சேவை நலன் பாராட்டு நிகழ்வின் பதிவுகள்.





06 அக்டோபர், 2019

தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறு-2019

எமது பாடசாலையில் 2019 தரம் 5 புலமைப்பரிசில் பரீடசையில் தோற்றி 41மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் , சித்திப்புள்ளிகளுக்கு மேல்பெற்றவர்களையும், வாழ்த்துவதுடன். இவர்களுக்கு வழிகாட்டிய அதிபர் , ஆசிரியர்களையும் பாராட்டுகின்றோம்.
தகுதி பெறத் தவறிய மாணவர்களும் இனிவரும் காலங்களில் இதனை அனுபவமாக கொண்டு கல்வியில் மேலும் வெற்றிகள் பெறவேண்டும். என இறைவனை வேண்டுகின்றோம்.


20 செப்டம்பர், 2019

தென்மராட்சிக் கல்வி வலய செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வில் எமது பாடசாலையின் ஐந்து அணிகள் முதலிடம் பெற்று சாதனை.







இன்றைய தினம் இடம் பெற்ற தென்மராட்சி கல்வி வலய செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வில் எமது பாடசாலையின் ஐந்து அணிகள் முதலிடம் பெற்று சாதனையை தமதாக்கி, மாகாண போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

முதலிடம்

தரம் - 3 ஆண்கள் அணி

தரம் - 3பெண்கள் அணி

தரம் - 4 ஆண்கள் அணி

தரம் - 4பெண்கள் அணி

தரம் - 5ஆண்கள் அணி


மூன்றாமிடம்

தரம் - 5 பெண்கள் அணி


இம் மாணவர்களை வாழ்த்துவதுடன், பயிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிய பாடசாலை அதிபர், உபஅதிபர் ஆகியோருக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

18 ஜூலை, 2019

ஆக்கத்திறன் கண்காட்சியும் தேசிய செயற்பட்டு மகிழ்வோம் சாதனையாளர் மதிப்பளிப்பும்.

எமது பாடசாலையில் இன்று இடம்பெற்ற ஆக்கத்திறன் கண்காட்சியும்  தேசிய செயற்பட்டு மகிழ்வோம் சாதனையாளர் மதிப்பளிப்பும் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தென்மராட்சி கல்விவலய திட்டமிடல் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.ல .லிங்கேஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக ஆரம்ப பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சோ.திருக்குமரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். அயல் பாடசாலை அதிபர்கள் மற்றும் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் சில பதிவுகள்.



































07 ஜூன், 2019

உலகளாவிய சிதம்பரா கணிதப்போட்டி 2019 இல்14 பேர் சித்தி.

உலகளாவிய சிதம்பரா கணிதப்போட்டி 2019 (Chithambara Maths Challenge Exam 2019) இல் எமது பாடசாலை மாணவர்கள் 14 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை வாழ்த்துவதுடன். வழிகாட்டிய ஆசிரியர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பில் நன்றிகள்.