எமது பாடசாலை அதிபர் திருமதி.சியாமளா கந்தசாமி அவர்களின் சேவை நலன் பாராட்டு நிகழ்வு.

                                       41 வருட கல்விப்பணியை நிறைவு செய்து ஓய்வு பெறும் அதிபர் திருமதி. சியாமளா கந்தசாமி அவர்களது சேவைநலன் பாராட்டு நிகழ்வு   07.06.2018 அன்று காலை 10.00 மணியளவில் எமது  பாடசாலையில் பாடசாலை ஆசிரியர் சகோதரத்துவத்தினால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஓய்வுநிலை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு, இவரது பண்புகளை, ஆளுமைத் திறனை வியந்து பாராட்டி கௌரவித்தனர். தொடர்ந்து மதிய விருந்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.




















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக