16 நவம்பர், 2017

சித்திரப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்வழங்கும் நிகழ்வு

எமது பாடசாலையின் கற்றல் வளநிலைய சித்திரப்போட்டியில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்வழங்கும் நிகழ்வு இன்று  இடம்பெற்றது .  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒருதொகைப் பணவைப்புச் செய்யப்பட்ட  வங்கிப்புத்தகங்கள் கல்வயலை சேர்ந்த தற்பொழுது சிங்கப்பூரில் வசிக்கும் வைத்தியர் .செல்லக்குட்டி செல்வகணேஸ் அவர்களால் வழங்கப்பட்டது . மாணவர்களுக்கான  சித்திர பயிற்சிப்பட்டறை மற்றும் போட்டிகளுக்கான  அனுசரணையினையும் இவரே வழங்கியிருந்தார் .  வைத்தியர் .செல்லக்குட்டி செல்வகணேஸ்  அவர்களுக்கு எமது பாடசாலை சமூகம் சார்பில் நன்றிகளை  தெரிவிக்கின்றோம்.


10 நவம்பர், 2017

குரு பிரதீபா பிரபா -2017

எமது பாடசாலை ஆசிரியை திருமதி .ரஞ்சினி.நரேந்திரன்  குரு பிரதீபா  பிரபா விருதினை பெற்றுக்கொண்டபோது....



தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் 79 வீதமான மாணவர்கள்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் 79 வீதமான மாணவர்கள் பெற்றுக்கொண்டமையை முன்னிட்டு அதிபர் ஆசிரியர்களை கௌரவிக்கும் மாகாணமட்ட நிகழ்வின் போது.



மாகாணமட்ட துரித கணித போட்டியில் எமது மாணவர்கள் சாதனை.

மாகாணமட்ட துரித கணித போட்டியில் தரம் 4 இல் ஜெயரட்னா ரகுராம் முதலாமிடத்தையும். நிமலரங்கன் ஹரிதர்சன் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர். மாணவர்களுக்கும் , பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் எமது பாராட்டுக்கள்.






06 அக்டோபர், 2017

தென்மராட்சி வலய மட்டத்தில் முதலிடம்.

                                              எமது பாடசாலையில் 2017 தரம் 5 புலமைப்பரிசில் பரீடசையில்  தோற்றி  19 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். பிறேமவாசன் பௌவினா 187 புள்ளிகளைப் பெற்று தென்மராட்சி வலய மட்டத்தில் முதலிடத்தில் உள்ளார். இவரையும் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் , சித்திப்புள்ளிகளுக்கு மேல்பெற்ற வர்களையும், வாழ்த்துவதுடன்.

தகுதி பெறத் தவறிய மாணவர்களும் இனிவரும் காலங்களில் இதனை அனுபவமாக கொண்டு கல்வியில் மேலும் வெற்றிகள் பெறவேண்டும். என இறைவனை வேண்டுகின்றோம்.




03 அக்டோபர், 2017

பாராட்டி வாழ்த்துகின்றோம்.

                                ஒன்பது மாகாணங்களுக்கிடையில் 22.09.2017கொழும்பில் இடம்பெற்ற தேசிய கணித வினாடிவினாப்போட்டியில் வடக்கு மாகாண அணி  சிரேஷ்ட பிரிவிலும் , கனிஷ்ட பிரிவிலும் முதலிடம் பெற்றது. இரு அணிகளிலும் எமது பாடசாலையின் பழைய மாணவிகளும். சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவிகளுமான க.சாம்பவி , ஜெ.விஷ்ணவி ஆகியோர் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இம் மாணவிகளை பாராட்டி வாழ்த்துகின்றோம்.

                                                                சிரேஷ்ட பிரிவு

                                                                  கனிஷ்ட பிரிவு



04 ஆகஸ்ட், 2017

தரம் ஒன்றுக்கான மாணவர் அனுமதி 2018





2018 இல் தரம் ஒன்றுக்கு மாணவர்களைச்  சேர்ப்பதற்கான  நேர்முகத் தேர்வு தொடர்பாக மேலதிக விளக்கம் தேவைப்படுவோர் பின்வரும் இணைப்பில் சொடுக்குவதன் மூலம் சுற்று நிருபத்தை பார்வையிட முடியும்.
http://www.education.gov.lk/tamil/images/imageGallery/news/2017/jun/grade-_2018_t.pdf



01 ஆகஸ்ட், 2017

இந்தியாவில் இடம்பெற்ற சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் எமது மாணவி சாதனை



சர்வதேச  ஒலிம்பியாட் போட்டியில் சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவி ஶ்ரீபாலகிருஸ்ணன் வனோஜா கலந்து கொண்டு வெண்கலப்பதக்கத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். இவர்  ஆரம்பக்கல்வியை எமது பாடசாலையில் கற்று 2014 ஆம் ஆண்டில் புலமைப்பரிசில் பரீடசையில் 192 புள்ளிகளை பெற்று மாவட்ட நிலையில் முதலிடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும்பல வெற்றிகள் பெறவும், சாதனைகள் படைக்கவும் எமது பாடசாலைச் சமூகம் சார்பில் வனோஜாவை வாழ்த்துகின்றோம்.


29 ஜூலை, 2017

டெங்குஒழிப்பு சிரமதானப்பணி

எமது பாடசாலையில் நடைபெற்ற டெங்குஒழிப்பு சிரமதானப்பணியில் மாணவர்கள், பங்கு பற்றிய போது

பிரிவுபசார நிகழ்வு

                          எமது பாடசாலையில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற திருமதி .ஞா.கனகராசா  திருமதி.த.சுதாகரன் ஆகியோரின் பிரிவுபசார நிகழ்வின் பதிவுகள்.


17 ஜூலை, 2017

2017வலய மட்ட செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வில்

2017 வலய மட்ட செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வில் எமது பாடசாலையின்  தரம் 4 பெண்கள் பிரிவு , தரம் 3 ஆண்கள் பிரிவு ஆகியன முதலிடத்தையும், தரம் 3 பெண்கள் பிரிவு, தரம் 4 ஆண்கள் பிரிவு, தரம் 5 பெண்கள் பிரிவு ஆகியன இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டன. பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் எமது பாராட்டுக்கள்.

குருளைச் சாரணர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு - 2017

எமது பாடசாலையில் இடம் பெற்ற குருளைச் சாரணர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வின் பதிவுகள்  



15 பிப்ரவரி, 2017

செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு - 2017

எமது பாடசாலையின் 2017 ம் ஆண்டுக்கான செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு 10.02.2017 வெள்ளிக்கிழமை  இடம் பெற்றது. பாடசாலை அதிபர் திருமதி.சி.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் உயர்திரு.சு.கிருஷ்ணகுமார் அவர்களும் மேலும் பல விருந்தினர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்விற்கு மைலோ நிறுவனத்தினர் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






26 ஜனவரி, 2017

மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு - 2017

யா /சாவகச்சேரி இந்து   ஆரம்ப பாடசாலை மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு 26.01.2017 வியாழக் கிழமை காலை  8.30 மணிக்கு இடம்பெற்றது. அதிபர் திருமதி .சி .கந்தசாமி தலைமையில் இடம்பெற்ற இந்  நிகழ்வில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்  கலந்துகொண்டனர் .



கால்கோள் விழா - 2017

எமது பாடசாலை முதல்வர் திருமதி .சி.கந்தசாமி தலைமையில் 11.01.2017அன்று இடம் பெற்ற தரம் ஒன்று மாணவர்களுக்கான கால்கோள் விழாவில் யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி முதல்வர் திரு.ந.சர்வேஸ்வரன்  அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு  சிறப்பித்தார். இந்  நிகழ்வின் சிலபதிவுகள்.